Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சோலார் பேனல்கள் உற்பத்தி செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு: ஓகே சொன்ன தூத்துக்குடி துறைமுகம்..!

சோலார் பேனல் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி சாதனங்கள் உற்பத்திக்கு நிலம் கண்டறியக் கோரி மத்திய அரசு கோரிக்கை வைத்தது. மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது. சோலார் பேனல்கள் உற்பத்தியில் உலக அளவில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் மின்னுற்பத்திக்கு 50% உபகரணங்கள் செனவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சூரிய மின் சக்தி உற்பத்திக்கான உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. நாட்டில் மின்சார உற்பத்தியானது அனல் மின்சாரம், காற்றாலை போன்ற பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேசமயம் மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மேலும் பல்வேறு முறைகளில் மின்னுற்பத்தி நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சோலார் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவது, அதற்கு தொடர்பான மின் சாதனைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மேலும், நாடு முழுவதும் இதற்காக உற்பத்தி மையங்கள் அமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக மாநில அரசுக்கள் தங்களின் விருப்பங்களை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

அதனடிப்படையில், தூத்துக்குடி துறைமுக கழகம், மத்திய பிரதேசம் மாநிலம், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் சூரிய மின் சக்திகான உபகரணங்கள் உற்பத்திக்கு பூங்காக்கள் அமைக்க அந்தந்த மாநில அரசுக்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, காற்றாலை மின் உற்பத்தி, சோலார் பேனல்கள் மின் உற்பத்திகளுக்கு தேவையான உபகாரணங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. பேட்டரி, இன்வெர்டர், ஸ்டீல் ஃபிரேம் போன்ற பல்வேறு விதமான உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |