Categories
அரசியல் மாநில செய்திகள்

TVயை பாருங்க தெரியும்…! லட்சணக்கான மனுக்களுக்கு தீர்வு… திமுகனா சும்மா இல்ல…. ஸ்டாலின் மாஸ் ஸ்பீச் …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்துடைய அரசை பொறுத்தவரை ஒரு மனுவை கொடுத்தா, அந்த மனு மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.  முடிந்த காரியங்களில் முடிந்தது என்று சொல்லுவோம். சில சட்ட சிக்கல்,  நீதிமன்றத்தின் தலையீடு, இப்படி பல பிரச்சனைகள் சில திட்டங்களுக்கு வந்துரும், சில பணிகளுக்கு வந்திரும், சில பணிகள் காலதாமதம் ஆக முடியக் கூடிய நிலை வந்துரும்.

எனவே இந்த கூட்டத்தின் வாயிலாக நான் உறுதி அழிப்பது என்னவென்று கேட்டீர்கள் என்றால், உறுதி அளிப்பதற்கு எனக்கு முழுத் தகுதி இருக்கு. காரணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்றேன். வாங்கியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் வைத்து ஒரு பெட்டியில் பூட்டிவைத்து, சொன்னேன்… நான்  ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக இந்த பெட்டியை தான் திறப்பேன்.

அனைத்து மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன். ஸ்டாலினால் இந்த பெட்டியை திறக்க முடியாது, அவர் மக்களை ஏமாற்றுகிறார் என்று அரசியல் நோக்கத்தோடு அரசியல்வாதிகள் சில கருத்துகளில் சொன்னாங்க….   நான் யாரு?  எப்படி ? அதெல்லாம் விளக்க தேவையில்லை. சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம் இதைத்தான் தலைவர் கலைஞர் அவர்களின் தாரக மந்திரமாக உள்ளத்தில் பதிய வைத்திருக்கிறார்.

அதே போல ஆட்சி அமைத்த அன்றைக்கே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையை உருவாக்கி அனைத்து பெட்டிகளையும் திறந்தோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊடகங்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தால் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Categories

Tech |