இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவல் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மாத கேபிள் கட்டணம் 30% முதல் 40% வரை உயரும் என கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி கேபிள் டிவி கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சோம்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேபிள் டிவி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories