மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் டிவி பார்ப்பதற்காக மாமியாரின் விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று மாமியார் விருஷாலி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது மருமகள் விஜயா சத்தமாக டிவி பார்த்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மாமியார் டிவியை அணைக்க ரிமோட்டை பிடுங்கி உள்ளார்.
அப்போது நடந்த சண்டையில் விஜயா மாமியாரின் கையை கடித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட புகாரில் மருமகள் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆனால் இதுதொடர்பாக அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். மேலும் டிவி பார்த்த சண்டையில் மாமியாரின் விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.