Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் … மிரட்டி விடும் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை  அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.  இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் மற்றும்,

Image result for டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ்

மெட்டாலிக் ரெட் என மூன்று நிறங்களில் விற்பனையாக உள்ளது. மேலும், டி.வி.எஸ். என்ட்ராக் 125 ஸ்கூட்டரில் ரேஸ் எடிஷன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுடன்,  எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல். கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது  ‘SmartXonnect’ என அழைக்கப்படுகிறது. இது அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் இதர நோட்டிஃபிகேஷன்களை டிஸ்ப்ளேவில் காட்டுகிறது.

Image result for டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ்

குறிப்பாக, இதில் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனினை இணைத்துக் கொண்டால் போதும். இதில்,  124-சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.4 பி.ஹெச்.பி. பவர் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 10.5 என்.எம். டார்க் @5500 செயல்திறனை வழங்குகிறது.

Categories

Tech |