கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.5 சதவீதம் இலாபத்தை இழந்ததாக TVS நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள TVS மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபத்தை செபியிடம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் காலாண்டு நிறைவடைந்த நிலையில் ஒட்டுமொத்த நிகர லாபமாக சுமார் ரூ.160.05 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் சுமார் ரூ.151.24 கோடியாக 5.5 சதவீதம் குறைவாக ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருவாயானது ரூ.4,626.15 கோடிகளிலிருந்து சுமார் ரூ.5,026.27 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த செலவானது ரூ.4,385.50 கோடிகளிலிருந்து சுமார் ரூ.4,793.40 கோடியாகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த இருசக்கர வாக விற்பனை மற்றும் ஏற்றுமதியோடு சேர்த்து 8.93 லட்சத்தை விட இந்த ஆண்டில் 8.84 லட்சம் குறைவாக விற்பனையாகியுள்ளது.