அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பெருந்தொற்றால் 6 லட்சம் பேரை இழந்த காலம் கடந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீன நாட்டில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் உலக அளவில் சுமார் 17.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அமெரிக்க நாடு சர்வதேச அளவில் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ” கொரோனாவால் 6 லட்சம் பேரை இழந்த காலம் கடந்து விட்டதாகவும், கொரோனா தொற்றால் தங்களது உறவுகளை இழந்தவர்களுடைய மனநிலையை தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்றும், தங்களது கண்களில் கண்ணீர் வருவதற்கு முன்னதாக உதடுகளில் புன்னகையை ஏற்படுத்தும் காலம் கூடிய விரைவில் வரும்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.