ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மெக்ளின் புரம் பகுதியில் ஜவுளிக்கடை உரிமையாளரான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டை பூட்டி விட்டு தன் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்திற்கு மோகன் குமார் செல்லும் போது தனது மாமனாரிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து ராமச்சந்திரன் தனது மருமகன் மோகன் குமாரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 21 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து ராமச்சந்திரன் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன் பின் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடையங்களை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 21 பவுன் தங்க நகையை திருடி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.