தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மிக கடுமையாக நடைபெற்றுள்ளது. அதில் 20 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கடுமையாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் மூன்று மாவட்டங்கள் சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலீபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த வாரம் 4 மாவட்டங்களை கொண்டுவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அதிபர் அஷ்ராப் கனி தலைமையில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து கடந்த மூன்று நாட்களாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் 10 மாவட்டங்களை தலீபான் பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் இந்த நிலைமையை பாதுகாப்பு படை வீரர்கள் கூடிய விரைவில் மாற்றி விடுவார்கள் என்று தெரிவித்துள்ளது.