Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் 2 முறை!… உறவுக்கு மறுத்ததால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… நிற்கதியாய் தவிக்கும் 3 குழந்தைகள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்ஷர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை அன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன்பின் ருக்ஷர் தூங்க மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவியை பாலியல் உறவுக்கு அன்வர் அழைத்துள்ளார். ஆனால் ருக்ஷர் உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அன்வர் மனைவியின் கழுத்தை நெறூத்து கொலை செய்துள்ளார்.

அதன்பின் தன்னுடைய மனைவியின் முகம் யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ருக்ஷவின் தலைமுடியை வெட்டி உடலை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஊரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கொண்டு பிணத்தை அன்வர் வீசியுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை அன்வர் தன்னுடைய மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாமல் கிடந்த பெண்ணின் பிணம் ருக்ஷர் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அன்வரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் நடந்த உண்மைகள் அனைத்தையும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ருக்ஷர் கொலைக்கு அன்வரின் சகோதரர் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அன்வர் மற்றும் டேனிஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகள் 3 பேரும் தாய், தந்தையை இழந்து நிற்கதியாக தவிக்கிறார்கள்.

Categories

Tech |