பிரேசிலில் 19 வயதுடைய இளம் பெண்ணிற்கு ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் இருக்கும் அதிசய நிகழ்வு நடந்திருக்கிறது.
பிரேசில் வசிக்கும் 19 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. எனினும் குழந்தைகள் வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்தவர்கள் என்ற அதிசயத்தை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனை Heteropaternal Superfecundation என்று அழைக்கிறார்கள்.
அதாவது மாதவிடாய் சுழற்சியில் வெளியாகும் இரண்டாம் கரு முட்டை வெவ்வேறு நபர்களின் விந்தணுக்களால் தனித்தனியான உறவில் கருத்தரிக்கும் போது உண்டாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது அந்த பெண் இரு நபர்களுடன் ஒரே நாளில் உறவு வைத்திருக்கிறார்.
அதன் பிறகு 9 மாதங்கள் கழித்து அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாள் வர இருக்கிறது. இந்நிலையில் அவர் தன் குழந்தைகளுக்கு உண்மையான தந்தை யார்? என்று தெரிந்து கொள்ள விரும்பி, தந்தை வழி சோதனை மேற்கொள்ள தீர்மானித்தார்.
அதன்படி அவர் உடலுறவு வைத்த நபரின் டிஎன்ஏவை சேகரித்த போது, ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே பொருந்தியது. பிறகு மற்றொரு நபருடன் உறவு வைத்துக் கொண்டதை நினைவுப்படுத்திய அந்த பெண், அவருக்கும் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டார். அப்போது மற்றொரு குழந்தையின் டிஎன்ஏ, அந்த நபரின் டிஎன்ஏ உடன் ஒத்துப் போயிருக்கிறது.
இது குறித்து மருத்துவர் தெரிவித்ததாவது, ஒரே பெண்ணிடமிருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்கள் மூலம் கருத்தரிக்கப்படும் சமயத்தில் இவ்வாறு நிகழும் என்றார். இது மட்டுமல்லாமல் தாய்க்கு உள்ள மரபணு அமைப்பு இரண்டு குழந்தைகளுக்கும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது 10 லட்சங்களில் ஒரு தடவை அதிசயமாக இந்த சம்பவம் நிகழும் என்று கூறப்பட்டிருக்கிறது.