அமெரிக்காவில் ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் பத்து மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் லில்லியானா மற்றும் ஃபிலடெல்ஃபியாவில் ஏடி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி பிறந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளும் வயிறு மற்றும் மார்பு பகுதிகள் ஒட்டிய நிலையில் இருந்தது.
இந்நிலையில், குழந்தைகள் பிறந்து 10 மாதங்கள் கடந்த பின் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இரண்டு குழந்தைகளும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சுமார், 10 மணி நேரங்களாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.