தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி 4 மாதத்தில் நயன் மற்றும் விக்கிக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நயன் மற்றும் விக்கி மட்டும் எப்படி சட்டத்தை மீறலாம் என்ற கேள்வி எழுந்துள்ளதால் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் திருமணம் ஆகி 5 வருடங்கள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
அதன் பிறகு மருத்துவ ரீதியாக பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அது தொடர்பான மருத்துவ சர்டிபிகேட்டை உரிய முறையில் காண்பித்தால் மட்டுமே வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கிடைக்கும். ஆனால் இந்த நடைமுறைகளை எல்லாம் நயன்தாரா பின்பற்றினாரா என்று தெரியவில்லை. அதன் பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தம்பதியிடம் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது நயன் மற்றும் விக்கி தம்பதிக்கு சென்னையில் உள்ள பிரபலமான ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களிடம் சுகாதாரத்துறை தற்போது விசாரணை நடத்த இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த மருத்துவமனையில் உள்ள சில மருத்துவர்கள் தான் நயன்தாராவுக்கு வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படும் நிலையில், வாடகைத்தாய் சட்டத்தின் விதிமுறைகளை மருத்துவர்கள் தான் ஒரு தம்பதிக்கு சரியான முறையில் கூற வேண்டும். அந்த மருத்துவமனை விதிமுறைகளை பற்றி கூறியதா என்று தெரியாத காரணத்தினால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை மீது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.