2021 ஆம் வருடம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு இன்பமான வருடமாக அமைந்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக வந்த தகவல், அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா படங்கள் குறித்த தகவல்கள், நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படம் குறித்த சில புகைப்படங்கள் என அடுத்தடுத்த சுவாரசியமான சினிமா தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சூர்யா ரசிகர்களுக்கு இன்ப செய்தியை அளிக்கும் விதமாக, தனது குடும்ப படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட இயக்குனர் பாண்டியராஜ் ஒரு முக்கியமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துடன் தெரிவித்துள்ளார்.
அதில், அவர் இயக்கி சூர்யா நடிக்கவுள்ள படங்கள் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். #SURIYA40 என்ற hashtagஇல் பதிவிடப்பட்ட அந்த பதிவில், சூட்டிங் பிப்ரவரியில் தொடங்க உள்ளதாகவும், இன்னும் முக்கியமான இரண்டு கேரக்டர் பைனல் ஆனதும் இரண்டு மூன்று வாரங்களில் சம்பவங்கள் தொடங்கும் காத்திருப்போம் என தெரிவித்துள்ளார்.