கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடுவதால் அதிபர் டிரம்ப் பின் கணக்கை முற்றிலுமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டது தான் அதிபரின் கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம் என ட்விட்டர் நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.