டுவிட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும்முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் நடைமுறைக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமல்லாது புது டுவிட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இப்போது புது புளூசந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக டுவிட்டர் புளூ சந்தாவுக்குரிய விலையானது மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது அறிமுக சலுகை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஒஎஸ்-ல் முன்பே டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் புது விலைக்கு அப்டேட் செய்துகொண்டால் புளூ செக்மார்க் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் வெப் பயனாளர்களின் புளூ சந்தாவை அவர்களாகவே ரத்துசெய்து கொள்ளலாம். மாறாக டுவிட்டர் தரப்பில் பயனாளர்களுக்கு தகவல் கொடுத்த பிறகு சேவை ரத்துசெய்யப்படும்.
புதிய மாற்றங்களின் பழைய டுவிட்டர் விதிகளின் கீழ் வெரிபைடு புளூசெக்மார்க் பெற்றவர்கள் மற்றும் புதிய புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்றவர்கள் என 2 புளூ செக்மார்குகள் இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்ற அக்கவுண்ட்களில், புது டுவிட்டர் விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்று எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.