Categories
தேசிய செய்திகள்

Twitter: இனி பணிநீக்கங்கள் இருக்காது…. ஆனால்!…. எலான் மஸ்க் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து  பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஊழியர்களுக்கு நிமத்தியளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புது நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். ஊழியர்களுடனான சந்திப்பில், டுவிட்டர் தற்போது பொறியியல் மற்றும் விற்பனைத்துறையில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மஸ்க் கூறினார் என அறிக்கை கூறுகிறது.

மேலும் புது வேலைகளில் மென் பொருள் தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மஸ்க் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருபுறம் புதிய முறையில் டுவிட்டர் “ப்ளூ டிக்” அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு நிறுத்தப்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |