Categories
தேசிய செய்திகள்

Twitter: ப்ளூ டிக் அப்ளை பண்ணுவது எப்படின்னு தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டரில் ப்ளூடிக் பெற இனிமேல் பணம் செலுத்தவேண்டும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இப்போது இந்த முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் 8$ (652.94 இந்திய ரூபாய்) பணம் செலுத்தி டுவிட்டரில் ப்ளூடிக் பெற்று கொள்ளலாம். இந்த புது அம்சமானது ஏற்கனவே ப்ளூ டிக் வாங்கியவர்களையும் பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கியவர்களையும் வேறுபடுத்தி காட்டுகிறது.

நீங்கள் பணம் கொடுத்து ப்ளூடிக் வாங்கி இருக்கிறீர்களா ? (அ) முன்பே ப்ளூடிக் பெற்றவரா என்பது உங்களது புரோபைலுக்கு கீழே காட்டும். பணம் செலுத்தி ப்ளூடிக் வாங்கும் வசதி இப்போது iOS பயன்படுத்தும் சில நாடுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் நவம்பர் 9, 2022 பின் உருவாக்கப்பட்ட எந்த டுவிட்டர் கணக்குகளும் தற்போதைக்கு டுவிட்டர் ப்ளூவுக்குத் தகுதி பெறாது. டுவிட்டர் ப்ளூவானது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் UK போன்ற சில பிராந்தியங்களில் மட்டுமே இப்போது கிடைக்கிறது.

வேறொரு நாட்டில் வசிப்பவராக இருப்பின், சிறிதுநாட்கள் இவ்வசதி இருக்காது. இதன் வாயிலாக டுவிட்டரில் ப்ளூடிக் வாங்கி தருவதாக நடைபெறும் மோசடிகளை தடுக்கமுடியும் என கூறுகின்றனர். டுவிட்டரில் ப்ளூடிக் பெற்றவர்களுக்கு சில கூடுதல் வசதிகளை twitter கொடுக்கவுள்ளது. நீண்ட வீடியோக்களை பதிவிடுதல், அதன் வாயிலாக வருமானம் பெறுதல், தேடுதலில் முதலில் காண்பிப்பது உள்ளிட்ட வசதிகளை தரவுள்ளது. பணம் செலுத்தி ப்ளூடிக் பெற டுவிட்டர் ப்ளூ என்ற வசதிக்கு சென்று உங்களது அக்கவுன்ட் பெயரை உள்ளிட்டு 8$ பணம் செலுத்தினால் ப்ளூடிக் கிடைக்கும்.

Categories

Tech |