சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார்.
அவர் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து வாக்களியுங்கள் என்று கூறியிருந்த நிலையில், 17 மில்லியன் பேர் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதில் 57% பேர் எலான் மஸ்க் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். தற்போது எலான் மஸ்க்குக்கு எதிராக வாக்கெடுப்பு வந்துள்ளதால், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தன்னை பற்றி விமர்சனங்களுக்கு தற்போது எலான் மஸ்க் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் வேறு ஒரு முட்டாள் இந்த வேலைக்கு கிடைக்கும் வரை நானே டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தொடர போகிறேன் என்று பதிவிட்டுள்ளார். வேறு ஒரு முட்டாள் கிடைத்தவுடன் நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமை வகிப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு டெஸ்லா நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கும் ஒரு சரியான ஆளை தேடி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் twitter சம்பந்தமான இனி எந்த ஒரு வாக்கெடுப்பு முடிவுகளுக்கும் ப்ளூடிக் பயனாளர்களுக்கு மட்டுமே உரிமை கொடுக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.
— Elon Musk (@elonmusk) December 21, 2022