ட்விட்டர் நிறுவனம் “ட்விட்டர் ப்ளூ” என்ற புதுவித சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
“ட்விட்டர் ப்ளூ” என்ற புதுவிதமான சந்தா முறையை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ட்விட்டர் ப்ளூ சேவையை பயன்படுத்தும் நபர்கள் ஏதேனும் தவறாக பதிவிட்டால் அதனை திருத்திக் கொள்ளலாம். மேலும் இந்த சேவையில் ஏதேனும் ட்வீட்கள் பிடித்திருந்தால் அதனை சேமிக்கவும் முடியும்.
இதனையடுத்து ட்வீட்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான வழிமுறைகளும் ட்விட்டர் ப்ளூ சேவையில் அமைந்துள்ளது. இந்த சேவைக்காக மாதந்தோறும் 210 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த சேவையை டுவிட்டர் நிறுவனம் முதலில் கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.