உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் சென்ற அக்டோபர் மாதம் இறுதியில் டுவிட்டரை விலைக்கு வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளூ டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் டுவிட்டர் நாளை முதல் புளூ டிக் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த சேவைகள் சந்தா பெற்ற பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த சேவைகளை பெறும் பயனர்கள் hd வீடியோக்களையும் பதிவேற்ற முடியும். இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புளூ டிக் சந்தா சேவைகளின் ஒரு பகுதியாக அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வண்ண பேட்ஜ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.