ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், தங்கள் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் 9% பங்குகளை சமீபத்தில் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், எலான் மஸ்க் தங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதற்கு வாழ்த்துக்களை கூறினார்.
மேலும், நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இருப்பார் என்ற ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் எலான் மஸ்க், தான் நிர்வாகக் குழுவில் இணையப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.