உலகப் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், தங்கள் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கியிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க், உலகப் பணக்காரர்களில் முதல் நிலையில் உள்ளார். உலக நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பான மின்னணு வாகனத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், அவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து நிறுவனத்தினுடைய 7.3 கோடி பங்குகள் இவருக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் எலான் மஸ்கிற்கு வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.
I’m excited to share that we’re appointing @elonmusk to our board! Through conversations with Elon in recent weeks, it became clear to us that he would bring great value to our Board.
— Parag Agrawal (@paraga) April 5, 2022
இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, தங்கள் நிறுவனத்தின் அங்கமாக எலான் மஸ்க்கை நியமித்திருக்கிறோம். சமீபத்தில் அவரிடம் உரையாடியதிலிருந்து, அவர் எங்களின் நிறுவனத்திற்கு சிறந்த பங்களிப்பை தருவார் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதிலில், உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கும் வரும் நாட்களில் ட்விட்டர் நிறுவனத்தை மேலும் முன்னேற்ற வழிகளில் கொண்டு செல்வதற்கும் ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.