ரஜினி ட்விட்டர் வீடியோ நீக்கம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாளை ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது. அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது.
வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கொடுத்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொரோனாவை தடுக்க சுய ஊரடங்கை ஆதரித்து ரஜினி வெளிட்ட வீடியோ ட்விட்டரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ரஜினின் கருத்து தவறானது என பலர் புகாரளித்ததை தொடர்ந்து வீடியோவை நீக்கியுள்ளது ட்வீட்டர் நிறுவனம். கொரோனவை 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறி இருந்தார்.
ரஜினியின் வீடியோ டெலீட் ஆனதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளிக்க ஆரம்பித்தனர். ரஜினியின் வீடியோவை எதற்காக டெலீட் செய்யப்பட்டது என்ற கேள்வி கணைகளை வீசி ட்விட்டருடன் மோத ஆரம்பித்தனர். #ShameOnTwitterIndia என்ற ஹேஷ்டாகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#ShameonTwitterIndia We need an explanation or apologize from @twitterindia for removing the awareness video. https://t.co/s7LbOuSb3r
— Krrish (@itsme_krrishm) March 21, 2020
சுயஊரடங்கு அன்று பிரதமர் மோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் என ரஜினி பேசிய வீடியோ யூடியூப்பில் இருக்கின்றது.