Categories
தேசிய செய்திகள்

“Twitter” நிறுவனத்தின் ஊழியர்கள் பணி நீக்கம்….? யாருக்கெல்லாம் வேலை பறிபோகும்…. இன்று 9:30 மணிக்கு ரிசல்ட்…..!!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் மஸ்க் குறைப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை தவிர்த்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும்படி மஸ்க் அறிவுறுத்தியபடி டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களையும் தற்போது அலுவலகத்திற்கு வரச் சொல்லி வேலை பார்க்க சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டுவிட்டரில் வேலை பார்க்கும் 50% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள ஊழியர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இது குறித்த மின்னஞ்சல் முகவரி இன்று இரவு 9:30 மணி அளவில் இந்திய ஊழியர்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சில ஊழியர்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் முகவரி அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி உள்ளடக்க கட்டுப்பாடு, எடிட்டோரியஸ், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முற்றிலுமாக நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் டுவிட்டர் நிறுவனத்தின் மூடப்பட்ட அலுவலகங்கள் அனைத்தும் வருகிற திங்கட்கிழமை திறக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |