Categories
Tech டெக்னாலஜி

Twitter, Facebook, Microsoft நிறுவனங்களைத் தொடர்ந்து Amazon அதிரடி நடவடிக்கை….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

அமேசான் நிறுவனம் தற்போது லாபம் இல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனத்தில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது. டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதில் முதல் கட்டமாக லாபம் இல்லாத பிரிவுகளில் செயல்படும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட துவக்கமாக ரோபோடிக்ஸ் பிரிவின் பணிபுரியும் 3000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 3000 ஊழியர்களையும் வேறு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ளுமாறு அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அமேசான் நிறுவனத்தின் பணி மிக நடவடிக்கையால் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியிடனலும் கவலையிலும் இருக்கிறார்கள்.

Categories

Tech |