Categories
அரசியல்

“ஸனாதன தர்மம்”…. எச். ராஜா டிவீட்….. அழகிரி பதிலடி….. அருணன் குறுக்கே வர…. ஒரே வாக்குவாதம் தா…!!

எச்.ராஜா ஸனாதன தர்மம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு கே.எஸ் அழகிரி மற்றும் அருணன் பதிலடி கொடுத்து, கடும் வாதமாக மாறியிருக்கிறது.

கே எஸ் அழகிரி சமீபத்தில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் திமுகவின் கூட்டணி, நீடிக்க வேண்டும். பாஜக தோல்வியடைய வேண்டும். ஸனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனை மட்டும் தனியே பிரித்து பாஜக கட்சியின் எச் ராஜா டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், அதற்கு முன் அவர் பேசியதும், அதன்பின்பு பேசியதும் நீக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பதிவிட்டு, ஸனாதன தர்மம் அழிக்கப்படவேண்டும். அதற்காக காங்கிரஸ் நம்முடன் இணைய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்ததை ஆதரிக்கும் இந்த இந்து  விரோத காங்கிரஸ், புறக்கணிக்கப்பட வேண்டும்.

இந்த வீடியோவை அனைத்து வீடுகளிலும் சென்றடைய செய்வோம் என்று எச்.ராஜா குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த, காங்கிரஸ், திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தாறுமாறாக பதிலளிக்க துவங்கினர். கே.எஸ் அழகிரி அளித்த பதில், “திரு.ராஜா அவர்களுக்கு நன்றி. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அனைத்து வீடுகளிலும் சென்று சேர முயற்சி எடுத்ததற்காக” என்று கிண்டலடித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த எச் ராஜா மற்றொரு ட்விட் பதிவிட, அதற்கு அழகிரி பதில் கொடுக்க என்று, ஒருவர் மாற்றி ஒருவராக சண்டையிட்டுள்ளனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணனும் இணைந்து கொண்டார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஸனாதன தர்மம் சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை நியாயப்படுத்துவதாக அழகிரி பதிவிட்டதற்கு எச்.ராஜா ஆவேசம் அடைகிறார்.

பிறப்பில் வேறுபாடு பார்க்கும் வர்ணாஸ்ரமத்தை, அந்த மனுதர்மத்தை ஸனாதனம் ஏற்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் அறிவிப்பதற்கு தயாரா? என்று பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |