பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க ட்விட்டர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது
இந்தியாவில் கொரோனா பரவிவரும் நெருக்கடியான காலகட்டத்தில் தகுந்த இடைவெளியை மக்கள் பின்பற்றி வரும் நிலையிலும் பெண்கள் மீதான வன்முறை ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. இதனை தடுப்பதற்காக பெண்கள் வன்முறை குறித்த தகவல்களை தனது தேடுபொறியில் ட்விட்டர் வழங்குகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பு மீதான தனது முயற்சியை ட்விட்டர் எடுத்துள்ளது.
ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் பயனர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இந்த சேவையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, பல தகவல்களின் அடிப்படையில் பெண்கள் மீதான வன்முறை குற்றங்கள் இந்த காலகட்டத்தில் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளன. இதனைத்தொடர்ந்து ட்விட்டர் இந்த சேவையை பயனர்களுக்கு வழங்க முடிவு செய்ததாக அதன் அலுவலர் தெரிவித்துள்ளார்.