ஜப்பானில் 9 பேரை கொடூரமாக கொலை செய்த ட்விட்டர் கில்லர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் சீரியல் கில்லர்கள் தொடர்பாக பல செய்திகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். தற்போது ஜப்பானில், ட்விட்டர் கில்லர் என்ற புதிய நபர் அறிமுகமாகி உலகையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளார். ஜப்பானில் சமூக வலைதளமான ட்விட்டரில் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்திய 15 முதல் 26 வயதிற்கு உட்பட்ட 9 பேரை குறிவைத்து தகாஹீரோ ஷிரேஷி என்பவர் கொலை செய்துள்ளார்.
மேலும் இறந்தவர்களின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கூலிங் பாக்ஸில் சேமித்தும் வைத்துள்ளார். இதையடுத்து தகவலறிந்த ஜப்பான் போலீசார் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் சம்மதத்துடன் தான் அவர்களை கொலை செய்தேன் என்று அவரது வாதத்தை முன் வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.