பல இளம்பெண்களை கொன்ற டுவிட்டர் கில்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானை சேர்ந்த டுவிட்டர் கில்லர் என்று அழைக்கப்படுபவர் Takahiro(27). பல பெண்களை கொலை செய்த இவருக்கு டோக்கியோ நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர், தங்களுடைய தற்கொலை எண்ணங்களை பற்றிய தகவல்களை இணையதளத்தில் பதிவிடும் இளம்பெண்களுடன் டுவிட்டர் மூலம் தொடர்புகொண்டு பழகியுள்ளார்.
பின்னர் அவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கு தான் உதவுவதாகவும் அல்லது சேர்ந்து நாம் இறந்து விடலாம் என்றும் கூறி நெருக்கமாக பழகி அவர்களை கொன்றுள்ளார். மொத்தத்தில் 15 முதல் 20 வயதுள்ள 9 இளம் பெண்களை இவர் கொன்றுள்ளார். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த 23 வயது பெண் காணாமல் போன வழக்கின் விசாரணையில் அதிகாரிகள் இவரை அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன இளம் பெண்களின் சடலங்கள் ஜப்பானிய தலைநகரின் புறநகரில் உள்ள இவரது குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஜப்பானிய அதிகாரிகள் தற்கொலை திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து டுவிட்டர் நிர்வாகம் ஜப்பான் அதிகாரிகளுடன் இணைந்துள்ளது. இப்போது இணைய தளத்தில் தற்கொலை குறித்து பதிவிடும் ஒவ்வொரு நபருக்கும் ஆதரவு கிடைக்கும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.