பிரபல நிறுவனத்தை தடைசெய்த நைஜீரிய நாட்டை புகழ்ந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பிரபல நிறுவனமான ட்விட்டருக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல் நைஜீரியா நாடும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தங்களுடைய பேச்சுரிமையை அனுமதிக்காத மற்றும் அனைத்து தரப்பினரது கருத்துகளையும் கேட்காத ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத் தலங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு நாடுகள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்றவற்றிற்கு தடை உத்தரவை பிறப்பிக்கும் போது, இவர்களுடன் போட்டி போடும் நிறுவனங்கள் முன்னிலை இடத்தை பிடிப்பார்கள். இதனையடுத்து இந்த நிறுவனங்களே தீயவர்களாக இருந்தால், நன்மை தீமையை ஆணையிடுவதற்கு இவர்கள் யார் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.