குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடி ஏற்றுவது, பல்வேறு நடன நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து கலை விழாக்களும் தற்போது, ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் மூலம் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இன்று நாடு முழுவதும் 71வது குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் தேசியக்கொடி ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார்.
பிரேசில் அதிபர் குடியரசு தினவிழாவில் கலந்து கொல்வதற்காக இந்தியா வந்துள்ளார். இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.
அதில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோனும், அவருடன் பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசுத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.