உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் மஸ்க் குறைப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை தவிர்த்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும்படி மஸ்க் அறிவுறுத்தியபடி டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களையும் தற்போது அலுவலகத்திற்கு வரச் சொல்லி வேலை பார்க்க சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.