Categories
Tech டெக்னாலஜி

“Twitter, Metta, Amazon போன்ற டெக் நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம்….. காரணம் என்ன….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வேலையை விட்டு நீக்கம் செய்கின்றனர். அதிலும் இந்தியர்கள் பலர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் H1B Visa கொண்டு வேலை செய்யும் பல இந்தியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் புதிய வேலை தேட இன்னும் 60 நாட்கள் என்று குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதனால் பலர் என்ன செய்வது என்பது தெரியாமல் உள்ளனர். அவ்வாறு பல ஊழியர்களை அவர்களின் கனவு வேலையில் இருந்து பல நிறுவனங்கள் நீக்குவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

  • மக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் இணையத்தை அதிக அளவு பயன்படுத்தினார். அந்த நேரத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊழியர்களின் தேவை இருந்தது. தற்போது கொரோனா பரவல் முடிந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். அதனால் இணைய பயன்பாடு குறைந்து பலர் இவ்வாறு வேலை இழக்க நேரிடப்பட்டுள்ளது‌.
  • கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் இந்த நிலை இப்படியே இருக்கும் என்று கணக்கிட்டு தேவைக்கு அதிகமாக முதலீடு மற்றும் ஊழியர்களை வேலைக்கு சேர்த்தனர். ஆனால் தொற்று முடிந்தததும் அனைவரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்து விட்டனர்.
  • ஆள் தேவை என்பது கொரோனா காலத்திற்கு முந்தைய அளவிருக்கு வந்துவிட்டதால் அளவிற்கு அதிகமாக இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பல நிறுவனங்களால் முடியவில்லை. அதனால் கடன் சுமைக்கு பயந்து பல நிறுவனங்கள் ஆட்களை குறைக்க தொடங்கி விட்டனர்.
  • நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையான நடைபெறும் போர் ஒரு காரணமாக உள்ளது.
  • பல வல்லரசு நாடுகள் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல சந்தைகளில் பலர் வேலை இழக்கிறார்கள். தற்போது இந்த நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல அவற்றின் வேலைகளை தொடங்குகிறது.

அவ்வாறு வேலை இழப்பு உலகம் முழுவதும் நடந்தாலும் முன்னணி நிறுவனங்கள் அவைகளின் சந்தை செய்கின்றனர் என்று குற்றசாட்டை எழுந்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் அதிக லாபம் கேட்பதால் அதிகப்படியான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

Categories

Tech |