இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம், கைது உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் விரைவில் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் லோகேஷ் கனகராஜ் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
மேலும் ஓட்டுப் போட்ட கைவிரல் மையுடன் கூடிய ஒரு புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதனுடன் தான் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக பதிவிட்டுள்ளார். இச்செய்தியைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.