பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையில்லாத பின்னூட்டங்களைத் தடுக்க ட்விட்டர் புதிய அம்சத்தை உருவாக்கி சோதனை செய்துவருகிறது.
என்னென்ன மாற்றங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும்:
இதன் மூலம்; (அனைவரும், நான் தொடருபவர்கள், நான் சுட்டிக்காட்டிய கணக்குகள்) என்ற மூன்று கோணத்தில் நமது பின்னூட்டங்களைக் கட்டுப்படுத்த முடியும்
பின்னூட்டத்தின் கட்டுப்பாடுகள், அதனை பதிவுசெய்ய முயற்சிப்போருக்கு தெளிவான வண்ணங்களில் ஆன ஐகான் மூலம் காட்சியளிக்கும்.
பின்னூட்டம் இட முடியாதவர்கள், தொடர்ந்து பதிவுகளைக் காணவும், அதனை மறுபதிவு செய்யவும் முடியும்.
இந்த அம்சத்தினை சில கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களிடத்தில் ட்விட்டர் நிறுவனம் சோதனை செய்து வருகிறது.