சமூகவலைதளங்களில் பரவும் போலி செய்தியை தடுப்பதற்கு ட்விட்டர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
உலகில் பல கோடி மக்கள் சமூக வலைத்தளங்களாகிய ஃபேஸ்புக்,ட்விட்டர,வாட்ஸ் அப் போன்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. இது ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும்,கேலிகிண்டல்கள், போலி செய்திகள் ,தவறான தகவல்கள் போன்றவை அதிகளவு பரவி வருகின்றது.
இதனை தடுக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் “HIDE REPLIES” எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் முதன் முதலாக கனடாவில் செயல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து,தற்போது சோதனையில் இருக்கும் இந்த அம்சத்தின் விமர்சனங்களுக்கு ஏற்ப பிற நாடுகளிலும் இந்த அம்சத்தினை தொடங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த அம்சத்தை கொண்டு பயனாளர்கள் போலியான மற்றும் தவறான கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்க இயலும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடிவதற்காக புதிய ஐகான் வசதியும் உள்ளது.