ஆப்கானிஸ்தானில் இருவேறு பகுதிகளில் நடந்த வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள லக்மன் பகுதியில் எதிர்பாராதவிதமாக இருவேறு வாகன விபத்துகள் ஏற்பட்டதாகவும் அதில் 18 பேர் பலத்த காயமடைந்ததாகவும் 20 பேர் உயிரிழந்ததாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தவ்லாதலை என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனத்தில் இருந்த 8 பேர் காயமடைந்ததாகவும், 12 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் நேற்று திடீரென லக்மன் பகுதியில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் 10 பேர் காயமடைந்ததாகவும், 8 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.