தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி சுங்கசாவடி வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அம்பலூர் சுங்கவாடி அருகாமையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 20 லட்சம் மதிப்புடைய குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வேனுடன் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வேன் உரிமையாளரான சதீஷ்குமார் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.