சட்ட விரோதமாக 1000 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருனபுரம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராயம் மற்றும் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கண்டுபிடித்து அவற்றை தரையில் கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மொட்டையன் மற்றும் தண்டபாணி ஆகிய 2 பேரையும் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.