சென்னையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் நகையை திருடிய பணியாளர் மற்றும் ஓட்டுனரை கைது செய்தனர்.
அலாவுதீனும் அற்புதவிளக்கும் என்ற தமிழ் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயபாரதி. அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் முத்து என 500 திரைப்படங்களுக்கு மேலாக தமிழில் நடித்துள்ளார். நடிகை ஜெயபாரதி வீட்டில் ஓராண்டுக்கு மேலாக நேபாளத்தை சேர்ந்த ஹக் பகதூர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவர் வீடு திரும்பிய போது வீட்டில் வைத்திருந்த 31 சவரன் நகை மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நடிகை ஜெயபாரதி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் வேலை பார்த்து வந்த பகதூர், தனியார் கார் ஓட்டுனராக இப்ராகிம் ஹக் என்பவருடன் இணைந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த நுங்கப்பாக்கம் காவல்துறை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.