சென்னை தரமணி அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.பி. டூல்ஸ் ஜெக் போஸ்டில் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை சோதனையிட்டதில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த அபிஷேக் சிங்கா, குமார் ராஜா ஆகிய இருவரை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தினர். விசாரனையில் குமார் ராஜா ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் அபிஷேக் சிங்காவுடன் சேர்ந்து சென்னையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.