சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 வாகனங்களின் ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கோமுகி அருகில் அமைந்திருக்கும் சிறுவர் புளியந்தோப்பு பகுதிக்கு பொக்லைன் எயந்திரம் மற்றும் லாரி ஆகியவை சென்றதை அவர் பார்த்துள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை கண்டதும் இரண்டு வண்டிகளின் ஓட்டுநர்கள் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதன்பின் அவர் லாரியின் பின் புறத்திற்கு சென்று பார்த்தபோது கோமுகி ஆற்றில் இருந்து மணல் கடத்த முயற்சி செய்ததை அவர் கண்டுபிடித்துள்ளார். பின்னர் பொக்லைன் எயந்திரம் மற்றும் லாரியை ராமன் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். மேலும் மணல் கடத்திய குற்றத்திற்காக சிறுவங்கூர் கிராமத்தில் வசிக்கும் பொக்லைன் எந்திரம் டிரைவர் மற்றும் லாரி டிரைவர் தேவேந்திரன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.