கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி விற்பனை செய்த ராஜப்பா, நாராயாணப்பா ஆகிய இருவரையும் காவல் துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அவர்கள் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.