தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் சானூரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் தனசேகரன் (வயது 39). இவர் புதுப்பட்டியிலுள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது தனசேகரனும், செங்கிப்பட்டியிலிருந்து பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த செபஸ்டின் ராஜ் என்பவரின் மகன் இன்பர்ட்ஜெலஸ்டினும் (27) நேருக்கு நேராக வேகமாக மோதினர்.
இந்த கோர விபத்தில் இருவருமே சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் போலீசார் 2 உடல்களையும் மீட்டு, திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.. மேலும் இந்த சம்பவம் குறித்து பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.