Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே வீட்டில் வித்தியாசமான முறையில் இரண்டு சடலம்… குழப்பத்தில் போலீஸ் ..!

பீளமேட்டில் ஒரு வீட்டில் பெண் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையிலும் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பீளமேடு அருகே காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக  பல மாதங்களாக கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் திலகவதிக்கு அப்பகுதியில் வசித்துவரும் பத்மநாபன் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே  அடிக்கடி சண்டையிட்டு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திலகவதியை  பத்மநாபன் கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது 2 பேரும் கொலை செய்யப்பட்டு பத்மநாபன் தூக்கிலிடப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |