இரு நாட்டு பாதுகாப்புப் படைகள் சேர்ந்து பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழைய உதவி செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழையும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் அதனை கட்டுப்படுத்திட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பிரான்ஸ் கடற்படையுடன் சேர்ந்து கொண்டு பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படை சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பாதுகாப்பாக பிரித்தானியாவிற்கு அழைத்து வந்தால் என்ன செய்வது என்பது தெரியாமல் குழப்பம் இருந்து வருகிறது. இந்த சம்பவத்தினை இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் மிகவும் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றனர்.
அதன்படி பிரான்சில் உள்ள Boulogne துறைமுகத்திலிருந்து பிரெஞ்சு மீட்பு படகான Abeille Liberte புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 30 புலம்பெயர்வோர் ரப்பர் படகு ஒன்றில் பயணிக்க சட்ட விரோதமாக ஆங்கிலக் கால்வாயின் பிரித்தானிய பகுதிவரை பிரெஞ்சு மீட்பு படகான Abeille Liberte அவர்களுடன் பாதுகாப்பாக பயணித்துள்ளது.
இதற்கிடையே பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையின் படகான Seeker, ட்ராக்கிங் மற்றும் ரேடியோ சிஸ்டம் அனைத்தையும் அணைத்து விட்டு அங்கு காத்து கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் Dover துறைமுகத்திற்கு பிரித்தானிய படகான Seeker ரப்பர் படகில் வந்த 30 புலம்பெயவோரை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. இவ்வாறு பிரித்தானியாவிற்கு பிரான்ஸ் வழியாக சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் வருவது அம்பலமாகியுள்ளது.