Categories
உலக செய்திகள்

“இந்த நாட்டையும் விட்டு வைக்கல”…. எப்படி பரவுச்சு….? வங்காளதேசத்தில் அதிர்ச்சி….!!

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கிரிக்கெட் வீராங்கனை இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தற்போது பல நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒமிக்ரான் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி இருந்தாலும் இதனால் இறப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 33 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடைய அண்டை நாடான வங்காள தேசத்தில் பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வங்காள தேச சுகாதாரத்துறை மந்திரி சாஹித் மாலிக் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ஜிம்பாப்வேயில் இருந்து சமீபத்தில் வங்காளதேசத்திற்கு திரும்பிய பெண்கள் கிரிக்கெட் அணியில் வீராங்கனைகள் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த இரண்டு வீராங்கனைகளும் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களுடைய உடல்நிலை சீராகி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |