தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 40டிகிரி செல்சியாசாகவும், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியாசாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்:
ஜூன் 18ம் தேதி அன்று கர்நாடகா, கோவா மற்றும் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 18 மற்றும் 19ம் தேதிகளில் குஜராத் கடற்கரை பகுதிகளில் 4 மீட்டர் வரை பேரலை எழக்கூடும் என்பதால் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.