நடிகர் அஜித்தின் இரு குழந்தைகள் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட மிகப்பெரிய நடிகராக வலம்வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் அஜித் நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயர் வைத்தனர். அதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு ஆத்விக் என பெயர் வைத்தனர்.
அஜித்-ஷாலினியின் இந்த இரண்டு குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் அவ்வளவு எளிதாக வெளியாகாது. மிகவும் அரிதாகத்தான் வெளியாகும். இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி என்று கொஞ்சி வருகிறார்கள். மேலும் டுவிட்டர் பக்கத்தில் #AadvikAjith , #AnoushkaAjith என்கிற இரு ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளன.இவர்கள் இரு வைரங்கள் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.